BREAKING NEWS

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனை.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனை.

ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய் விற்பனை நிலையம் துவங்கப்பட்டது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தின் கீழ் மதுரை,நெல்லை போன்ற ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பிரதான பொருட்கள் விற்பனை திட்டம் அளிக்கப்பட்டிருந்தது இந்த திட்டம் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 30 ரயில்வே நிலையங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பிரதான பொருட்களை விற்பதற்கு விருப்பம் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் எந்த கட்டணமும் செலுத்தாமல் 15 நாட்கள் அந்தந்த ஊர்களின் பிரதான பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

 

இதன் மூலம் பயணிகள் அந்தந்த ரயில் நிலையங்களில் அப்பகுதியில் பிரபலமான பொருட்களை எளிதில் வாங்கிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )