BREAKING NEWS

கோவில்பட்டி விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்கம் சார்பில் 30 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினர்.

கோவில்பட்டி விஸ்வகர்ம நகை தொழிலாளர் சங்கம் சார்பில் 30 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினர்.

10ம்வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு (2021-2022) தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகள் 30பேருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மந்தித்தோப்பு ரோட்டியுள்ள தங்கமஹால் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.விழாவுக்கு விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஸ்வர்கம மகாஜன சங்கத்தலைவர் பாலமுருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை அவர் வழங்கினர். விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்க துணைத்தலைவர் மாரியப்பன், செயலாளர் முருகானந்தம் , துணைச்செயலாளர் அருணாசலம், பொருளாளர் மாரியப்பன் , மற்றும் விஸ்வகர்ம நகைத்தொழிலாளர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )