கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு திருவிழா கோலாகலம்- பக்தர்கள் நவராத்தி கொலு கண்டு ரசித்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 26-ந்தேதி தொடங்கி 9 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த நவராத்திரி கொலு விழா திருக்கோயில் உற்சவர் சன்னதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கிருஷ்ணன் லீலைகள், விநாயகர் திருவிளையாடல், வள்ளி, தெய்வானை, முருகன் சிலைகள், தேசத் தலைவர் சிலைகள், உள்ளிட்ட பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நவராத்திரி கொலு திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நவராத்திரி கொலு திருவிழாவை சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
CATEGORIES தூத்துக்குடி