கோவில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி!! திருவாரூரில் பரபரப்பு.
கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட 18-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் சித்திரை, வைகாசி மாதங்கள் தொடங்கி நாளே கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கமாக அமைந்துள்ளது. இந்நிலையில் திருவிழாவின் போது அன்னதானம் என்பது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது கோவில் திருவிழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் சாப்பிட்ட 5 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள், உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.