BREAKING NEWS

கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!

கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

'மக்கள் இயக்கங்கள் மீது வன்மத்தைக் காட்டாதே': ஆளுநருக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் அவரின் வருகையை எதிர்த்து கோவையில் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், ” பாப்புலர் பிரண்ட் குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கின்றோம்; ஆளுநரே அவதூறு குற்றச்சாட்டை உடனடியாக திரும்பப் பெறு, ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக மக்கள் இயக்கங்கள் மீது வன்மத்தை காட்டாதே, தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக திரும்பப்பெறு” போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த போஸ்டர் ஒட்டியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )