`கோவை மாநகருக்கு ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படும்’- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
`கோவை மாநகருக்கு ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படும்’- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“கோவை மாநகருக்கு ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படும் என்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘அறிவுசார் பூங்கா’ அமைக்கப்படும்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, பேசிய முதல்வர், “திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளோம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 69 ஆயிரம் கோடிக்கு 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தெற்காசியாவிலேயே முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என செயலாற்றுகிறோம். தமிழகத்தில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுபட தொழில்முனைவோரை கேட்டுக் கொள்கிறேன். நமது மாநிலம் தொழில்வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழவேண்டும்.
CATEGORIES கோவை
