BREAKING NEWS

சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த காவல்துறை தடை.

சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த காவல்துறை தடை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தருவர்

இந்நிலையில் சுவாமி சன்னதி முன்பு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் நடந்து செல்ல இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து காவல்துறையிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

 

இதனை அடுத்து சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடனடியாக வாகனங்களை சுவாமி சன்னதியில் நிறுத்துவதற்கு தடை விதித்தார் இச்சம்பவத்தை அறிந்த பக்தர்கள் சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் மற்றும் காவல்துறையினருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )