BREAKING NEWS

சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் ஹவாய், உச்சநீதிமன்ற அமர்வில் விசாரித்து கொண்டிருந்தபோது சனாதனத்தின் வாழ்க என்று கோஷம் போட்டு ராகேஷ் கிஷோர் என்பவர் நீதிபதி மீது செருப்பு வீசினார்.

இதனை கண்டித்து சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் திருமலைச்சாமி, வழக்கறிஞர்கள் கதிரேசன், விவேகானந்தன், பாக்கியராஜ், கார்த்திக், ராம்குமார், சுரேஷ்குமார், முருகேஷ், வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS