BREAKING NEWS

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்த 2 பக்தர்கள் பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு சென்றனர்.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்த 2 பக்தர்கள் பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு சென்றனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர்கள் அல்லிராஜ், முருகன். இருவரும் அண்டை மாநிலமான கேரளாவில் வியாபாரம் செய்து வருகின்றனர் இவர்கள் இருவரும் திருச்செந்தூர் முருகன் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக 41 நாட்கள் உணவு உழுந்தாமல் கடும் விரதம் இருந்து வெறும் காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொண்டு 2 ஆம் ஆண்டாக பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு சென்றனர்.

 

 

முன்னதாக அதிகாலையில் திருமலை கோவிலில் இருந்து பறவை காவடியை தொடங்கிய இவர்கள் கடையநல்லூர், புளியங்குடி வழியாக சங்கரன்கோவில் வந்தனர். பின்னர் மேலரத வீதி, வடக்கு ரத வீதி,

 

கீழரதவீதி வழியாக சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் நுழைவு வாயிலில் முன்பு வந்தனர். அங்கிருந்தவாறே கோமதி அம்பாளை தரிசித்து திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கு சென்றனர்.

 

 

பறவை காவடியை ஏராளமான பக்தர்கள் வழிநெடுக நின்று வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா என்ற பக்தி கோஷத்துடன் வரவேற்றும் காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.

 

CATEGORIES
TAGS