சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் அரசு பள்ளியில் உலக கழிப்பறை தின பேரணி நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளாளங்குளம் ஊராட்சி சார்பில் உலக கழிப்பறை தினப் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பராசக்தி தலைமை வகித்தார்.
மேல நீலிதநல்லூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வெள்ளாளன்குளம் ஊராட்சித் தலைவர் ஜெயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து பேரணி நடைபெற்றது. பாண்டியாபுரம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
முன்னதாக ஆசிரியர்களும் மாணவர்களும் கழிப்பறையை சுத்தமாக வைப்பது குறித்த உறுதிமொழியை எடுத்தனர். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர் மைக்கேல்ராஜ் வரவேற்றார் ஆசிரியர் ஏஞ்சல் மலர் மெரினா நன்றி கூறினார்.
CATEGORIES தென்காசி
TAGS ஆரம்பப்பள்ளி ஊராட்சிஉலக கழிப்பறை தினப் பேரணிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றியம்வெள்ளாளங்குளம் ஊராட்சி