சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் என்பவர் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் கணேசன் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டிற்குள் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் வாளி மற்றும் குடம் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை மொத்தமாக அணைத்தனர். மேலும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் கரிவலம் வந்த நல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை வீட்டிற்குள் இருந்த டிவி, அலமார் போன்ற அனைத்து பொருள்களும் தீயில் கருகி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.