BREAKING NEWS

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.

 

 

இக்கோவிலில் ஒவ்வொரு விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலும் தனுர் மாத பஜனை குழுவினரும் இணைந்து 68 ஆவது ஆண்டு தேவார பஜனை இன்று அதிகாலையில் தொடங்கியது.

 

 

பஜனை குழு மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் காலையில் 5.30 மணிக்கு திருக்கோவில் முன்பிருந்து தொடங்கி தேவராம் பாடியபடி நான்கு ரத வீதிகள் வலம் வந்து மீண்டும் திருக்கோவிலை சென்றடையும்.

 

இந்நிகழ்வினை முன்னாள் கஸ்டம்ஸ் அதிகாரி கணபதி தொடங்கி வைக்க சிவனடியார்கள் தேவாரம் பாடி நான்கு ரத வீதிகள் வலம் வந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )