BREAKING NEWS

சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு

சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புதிய நகரத் தலைவராக உதயகுமார் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுவதாக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அறிவித்தார்.

இதற்கு சங்கரன்கோவில் பாஜக நகர நிர்வாகிகள் கட்சிக்காக உழைத்து சிறைக்கு சென்றவர்களை மீண்டும் நகர தலைவராக நியமனம் செய்ய வேண்டும் அல்லது அனுபவம் உள்ளவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அக்கூட்டத்தில் இருந்து சங்கரன்கோவில் நகர பொதுச்செயலாளர்கள் மணிகண்டன், கோமதிநாயகம், நகரச் செயலாளர் அருண், வர்த்தக அணி செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் அந்தோணிசாமி, நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நகரத் தலைவர் சங்கர்ராஜ், நிர்வாகி சிவனு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தை தொடர்ந்து சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Share this…

CATEGORIES
TAGS