சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக ஒரு கிலோ மல்லிகை பூ 800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ 3100ரூபாய்க்கு விற்பனையாகிறது இது குறித்து வியாபாரிகள் தரப்பில் தரப்படும் தகவலானது.
“பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூவின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மேலும் நாளை மறுநாள் பொங்கல் திருவிழா கேரளாவில் நாளை மறுநாள் திருமண வைபவங்கள் நடைபெறுவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.
மேலும் கேரளா வியாபாரிகள் அதிக அளவில் போட்டி போட்டு மல்லிகை பூவை ஏலத்தில் எடுப்பதால் விலை உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது நாளை இன்னும் விலை உயரம் என வியாபாரிகள் தரப்பில் தகவல் தரப்படுகிறது.