சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் அதிக அளவில் திருடு போவதாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்நிலையில் கடந்த பொங்கல் அன்று மாலையில் ரயில் நிலையத்தில் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளத்தைச் சேர்ந்த வேல்சாமி என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில் நிலையத்துக்குள் சென்று நடை பயிற்சி மேற்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது இரண்டு சக்கர வாகனத்தை காணவில்லை.
இது குறித்து சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார் புகாரின் பேரில் நகர் காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள மீன் துள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தன மாரியப்பன் மற்றும் சீவலராயனேந்தலை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகியோரை பிடித்து விசாரித்ததில் ரயில்வே பீடர் சாலையில் இரண்டு சக்கர வாகனத்தை திருடியது தாங்கள் தான் என குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில்,..
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் மேலும் வாலிபர் சந்தன மாரியப்பன் பல்வேறு மாவட்டங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்படுகிறது.