BREAKING NEWS

சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்.

சங்கராபுரம் அருகே சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்.

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் 2-வது தவணை செலுத்தி 6 மாதம் முடிந்த தகுதியுடைய அனை வருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

பேரூராட்சி மன்றதலைவர் ரோஜாரமணிதாகப்பிள்னள தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன், பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், ராமச்சந்திரன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். முகாமில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )