சங்கராபுரம் ஜெயின்ட் ஜோசப் அகடாமியின் 26 ஆவது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மயிலம்பாறைஅருகே உள்ள செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 26 ஆவது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் ஜோசப் சீனிவாசன் பள்ளியின் முதல்வர் சாரல் ஜோசப் இவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
விழாவினை துவக்கி வைத்து பேசிய பள்ளியின் தாளாளர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு ஆண்டு விழா என்பது தேவையா கேட்டால் இன்றைய சூழலில் கண்டிப்பாக தேவை ஏனென்றால் மனிதர்கள் மாணவர்கள் நாம் அனைவரும் இசையும் கலைகளும் உணர்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்கும் இருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்ட வர வேண்டுமென்றால் இது போன்ற நிகழ்வுகள் அவசியம் என்றும் கடந்த 26 ஆண்டுகளாக பல்வேறு திறமையான மாணவர்களை உருவாக்கி அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் நமது பள்ளி மாணவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மிக முக்கிய காரணம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நமது பள்ளிக்கு கொடுக்கின்ற அன்பும் ஆதரவும் தான் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் அதைத் தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைத்து மாணவர்களும் முதல் நாள் நிகழ்வில் ஆடல் பாடல் நாட்டியம் இசை இசை போன்ற பல்வேறு கலைகளை மேடையில் நிகழ்த்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.