BREAKING NEWS

சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி .. ! தோட்டத்தில் கிணற்றில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்..

சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி .. ! தோட்டத்தில் கிணற்றில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்..

 

விருதுநகர் அருகே , தோட்டத்திலுள்ள விவசாயக்கிணற்றில் குளிக்கச்சென்ற இருவர், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநரான சீனிவாசன் என்பவர், தனது நண்பர் முனியசாமியுடன் அதிகாலையில், முதலிப்பட்டியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

 

அப்போது மின்வேலியில் முனியசாமி சிக்கிக்கொண்ட நிலையில், அவரை காப்பாற்ற சென்ற சீனிவாசன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர் . தோட்ட உரிமையாளர் மோகன் ராஜை , போலீசார் தேடி வருகின்றனர் .

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )