சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – ரூபாய் 2,500/- பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேர்மராஜ், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கருப்பசாமி மற்றும் போலீசார் நேற்று (16.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்ட போது,
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலையூர் சாலை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோவில்பட்டி மந்திதோப்பு ஸ்ரீராம் நகரை சேர்ந்த விஜயாகப்பன் மகன் அந்தோணிசாமி (56) என்பதும் அவர் சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி அந்தோணிசாமியை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 2,500/- பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி அந்தோணிசாமி மீது ஏற்கனவே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு லாட்டரி விற்பனை வழக்கும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஒரு லாட்டரி விற்பனை வழக்கும் என 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.