BREAKING NEWS

சமயபுரம் மாரியம்மன் கோவில் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

சமயபுரம் மாரியம்மன் கோவில் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (56) , ராஜலட்சுமி (49) தம்பதி. இவர்கள் மகன், மருமகள், மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்தோடு சமயபுரம் வந்துள்ளனர். பழனிச்சாமி இரவு தங்கிவிட்டு இன்று காலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்து மொட்டை அடித்து விட்டு, மாரியம்மனை தரிசிப்பதற்காக பொது தரிசனத்தில் வரிசையில் நின்று வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கோவில் வளாகத்தில் சிறுவன் ஒருவன் விற்றுக்கொண்டிருந்த “ஆசை” என்ற பெயர் நிறுவனத்தின் தண்ணீர் பாட்டிலை வாங்கியுள்ளார். மூடியைத் திறந்து பார்த்தபோது அதில் பல்லி இறந்து மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து பல்லி கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்ட பழனிச்சாமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அங்கு புகாரை வாங்க மறுத்ததை அடுத்து நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )