BREAKING NEWS

சமூகவலைதளமான ட்விட்டரில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள்

சமூகவலைதளமான ட்விட்டரில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள்.

ட்விட்டரில் 50 சதவீதம் போலி கணக்குகள்: எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்

சமூகவலைதளமான ட்விட்டரில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள் உள்ளதாக எலான் மஸ்க் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதைத் தடுக்க ட்விட்டர் நிறுவனம் முயன்றது. பின்னர் அந்த முடிவை ட்விட்டர் நிறுவனம் கைவிட்டது. இதனால் அந்நிறுவனம் விரைவில் எலான் மஸ்க் வசம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டரில் கணக்கு வைத்திருப்போர் தொடர்பாக அந்நிறுவனம் தெரிவிக்கும் எண்ணிக்கை உண்மையானது அல்ல என எலான் மஸ்க் திடீர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,” ட்விட்டரில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கணக்குகள் போலியானவை. எனவே, இது குறித்து ட்விட்டர் நிறுவனம் உண்மையை கூறினால் மட்டுமே, அதனை வாங்குவதற்கான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்” என அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ட்விட்டர் முதன்மை அதிகாரி பராக் அகர்வால்,” ட்விட்டரில் போலி கணக்குகள் 5 சதவீதத்திற்குள் மட்டுமே இருக்கும். ட்விட்டர் நிறுவனத்தின் தரவுகள் உண்மையானவை. அதேநேரத்தில், ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை பொதுவெளியில் பகிர முடியாது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பாக வெளியில் இருந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் நம்பிக்கை இல்லை. அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உண்மையானதாக இருக்க முடியாது” என்று அவர்தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,” ட்விட்டரில் 20 சதவீத கணக்கும் போலி எனனும் போது அதை எலான் மஸ்க் அறிவித்தவாறு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவது மிகவும் சிரமம்” என டெஸ்லா நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )