சமையல் அறையில் பிடிபட்ட ஏழு அடிநீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு. வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்.

செங்கைஷங்கர் செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் உறங்கி எப்போதும் போல் எழுந்துள்ளனர். சமையலறைக்கு காபி போடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்பொழுது கேஸ் சிலின்டரின் அடியில் அடியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவத்திற்கு விரைந்து வந்த மறைமலை நகர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம்போராடி 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
சாரைப்பாம்பை பிடித்தபிறகுதான் பிரபு குடும்பத்தினருக்கு நிம்மதி பெருமூச்சடைந்தனர்.இச்சம்பவம் அப்பகுதி அக்கம்பக்க வீட்டினரிடையே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலகியது.
