சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஹேன்ட் இன் ஹேன்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.தேவேந்திரன் தலைமை வகித்தார்.
காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுசில் குமார் முன்னிலை வகித்தனர். காட்பாடி ஒருங்கிணைப்பாளர்வெங்கடேசன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் செல்வி ஆர்ஜிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சரவணன், மணிசேகர், நாகப்பன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா மற்றும் சைல்ட் கேர் 1098 இணைந்து நடத்தின. மகாலட்சுமி நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்