சர்வதேச போட்டிகளில் பெண்குழந்தைகள் பங்கேற்க வேண்டி கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சார்பில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் முழு உருவச்சிலையை வடிவமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல் நிறுவனம் மாணவ மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கொரோனா பொது முடக்கத்தால் பள்ளி மாணவ மாணவியினரிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து கொண்டே வருவதை எண்ணி மாணவ மாணவியிரிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் வடிவமைக்கப்பட்ட முழுஉருவச்சிலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சதுரங்க போட்டியில் 5முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கிரிக்கெட்டில் உலக கோப்பையை வெல்ல இந்திய அணியை வழி நடத்திய மகேந்திரசிங் தோனி ஆகிய இருவரின் வடிவமைக்கப்பட்ட முழு உருவச்சிலையை இளம் விளையாட்டு மாணவிகள் கலந்து கொண்டு சிலைகளை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தனர்.

இதனைதொடர்ந்து பனை ஏறும் தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் பனைமரத்தில் பனை ஏறும் தொழிலாளியின் வடிவமைக்கப்பட்ட முழு உருவச்சிலையை நிறுவனர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேணிய நிறுவன இளம்தொழில் அதிபர் பாலசிங் கடந்த சில வருடஙலகளாக குழந்தைகளிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு வருங்காலங்களில் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விளையாட்டு வீரர்களின் முழு உருவசிலை திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
திறக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் சிலை முன்பு இளம் விளையாட்டு வீரர்களான மாணவ மாணவியர் கலந்து கொண்டு செஸ் விளையாடுவது போன்றும், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியிடம் கோப்பையை பெறுவது போல் செல்பி எடுத்து மகிழ்ந்து சென்றனர்.
முழுஉருவச்சிலை திறப்பு நிகழ்வில் வாடிக்கையளர்கள், பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
