BREAKING NEWS

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நடைபெறும் சமூகநீதி மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நடைபெறும் சமூகநீதி மாநாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாநாடு அமையும் என புதிய திராவிடர் கழக நிறுவன தலைவர் ராஜ்கவுண்டர் பேட்டி.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலமே அனைத்து சமூக மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு கிடைக்கும் எனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிகமெங்கும் முழுவதும் உள்ள வேட்டுவகவுண்டர் உள்ளிட்ட 260 சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைந்து சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு வேண்டி மதுரையில் அடுத்த மாதம் நடைபெறும் சமூகநீதி மாநாட்டில் வலியுறுத்த உள்ளனர்.

இம்மாநாட்டிற்கான அழைப்பிதழை புதிய திராவிடர் கழக நிறுவனர் ராஜ்கவுண்டர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்

இதன் ஒருபகுதியாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் வீடு வீடாக சென்று வழங்கினார்.

பின்னர் புதிய திராவிடர் கழக ராஜ்கவுண்டர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்.
மதுரையில் நடைபெறும் சமூகநீதி மாநாட்டில் மத்திய மாநில அரசுகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட கோரி புதிய திராவிடர் கழகத்தின் சார்பில் பத்துலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மேலும் இம்மாநாடு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தும் கொடுக்கும் வகையில் அமையும் தமிழக அரசியல் வரலாற்றில் சமூக நீதி மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என புதிய திராவிடர் கழக தலைவர் ராஜ்கவுண்டர் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )