சாய்த்தது ‘சாபா’ புயல்… இரண்டாக உடைந்து கடலுக்குள் மூழ்கிய கப்பல்: 27 பேரின் நிலை என்ன?

சீனாவில் ஹாங்காங் அருகே ‘சாபா’ புயலில் சிக்கிய கப்பல் இரண்டாக உடைந்து கடலுக்குள் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஹாங்காங் அருகே கடலில் கட்டுப்பான பகுதியில் கப்பல் ஒன்று இன்று ஈடுபட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட ‘சாபா’ புயலால் ஏற்பட்ட பலத்த அலை கப்பல் மீது மோதியது. இதில் கப்பல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்க தொடங்கியது.
இதனிடையே உடனடியாக ஹாங்காங் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இருந்தவர்களைக் கயிறு கட்டி மீட்க முயன்றனர். அபோது 3 பேரை மீட்ட நிலையில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது. இதனால் கப்பலில் இருந்த 27 பேரின் நிலைமை தெரியாமல் இருப்பதனால் மீட்பு படையினர் தொடர்ந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
TAGS தலைப்பு செய்திகள்
