சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த போக்குவரத்து பெண் காவலர்.
![சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த போக்குவரத்து பெண் காவலர். சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த போக்குவரத்து பெண் காவலர்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221022-WA0104.jpg)
தஞ்சை பெரியகோவில் ரவுண்டா சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீர் தேங்கி ரோட்டில் பள்ளம் தெரியாததால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி வாகனம் ஓட்டி வந்தனர்.
இதனை கண்ட அப்பகுதி போக்குவரத்து பெண் காவலர் தனலெட்சுமி மனித நேயத்துடன் சாலை ஓரத்தில் கிடந்த கற்களை எடுத்து வந்து குண்டும் குழியுமான சாலையை கற்களால் மூடினார்.
தஞ்சை மாநகராட்சி செய்ய வேண்டிய பணியை போக்குவரத்து பெண் காவலர் செய்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
CATEGORIES தஞ்சாவூர்