BREAKING NEWS

சாலையோரம் குப்பை கொட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

சாலையோரம் குப்பை கொட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம்  உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை

உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உடுமலை பொள்ளாச்சி சாலையில் கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையின் தென்புறம் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டுவது தொடர்ந்து நடக்கிறது.
இதனால் பகுதியில் கடும் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு நகருக்குள் நுழையும் போது துர்நாற்றம் காற்றில் பரவி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் உடுமலை நகரில் இருந்தும் அருகாமையில் உள்ள ஊராட்சி பகுதிகளில் இருந்தும் மண்டப கழிவுகள் ஓட்டல் கழிவுகள் கோழி ஆடு மாடு மீன் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த இடத்தை சுத்தம் செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தி உள்ளார் இனிஇப் பகுதியில் குப்பைகளை கொட்டாமல் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் நபர்களை கண்டறிந்து ரூபாய் 5 ஆயிரம் அபராதமும்கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்தும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )