சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கினார் எஸ்.ஐ.,!
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கினார் எஸ்.ஐ.,!
காட்பாடி காந்தி நகர் பகுதியில் சாலையோர வாழ் ஏழை ,எளிய மக்களுக்கு உணவு வழங்கி உதவி ஆய்வாளர் தனது கருணை உள்ளத்தை காண்பித்துள்ளார்.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் ஆகும் .இதை மெய்ப்பிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ,காட்பாடி காந்திநகர் பகுதியில் நேற்று விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் உணவின்றி தவித்து வரும் சாலையோர ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவை வழங்கினார் . இவரின் இதைத்தகைய மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். குற்றங்களை தடுப்பதோடு நிறுத்தி விடாமல் இதுபோன்று ஏழை எளிய பொதுமக்களின் நலனில் அக்கரை கொள்ளும் காவல்துறை சார்ந்தவர்களை பார்ப்பது அரிதே. கருணையின் நிறம் காக்கி என்பதை ஆதர்ஷ் நிரூபித்து வருகிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.