சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இரவு உணவு விநியோகம்!
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இரவு உணவு விநியோகம்!

புதுச்சேரியில் பெனேவோலண்ட் அமைப்பு ஆரம்பிக்க ஊன்றுகோலாக இருந்த முனைவர் லோ.விஜயகுமாரின் தந்தை பிறந்தநாளை முன்னிட்டு 60 சாலையோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அவரவர் இருக்கும் இடத்துக்கே போய்ச் சென்று இரவு உணவு வகைகள் (அசைவம்) மற்றும் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையில் பயிலும் மாணவர்கள் சசிதரன், பிரவீன், ரஞ்சித், அந்துவான் டேனியல், அரவிந்த் வாசன், அஸ்வின் பாபு, ரமேஷ் பாபு மற்றும் முனைவர். அருள் பிரசாத் உறுதுணையாக இருந்தனர். மேலும் இது போல் மேலும் அமைப்பு நன்கு வளர உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களுக்கு பெனேவோலண்ட் அமைப்புத் தலைவர் லோ. விஜயகுமார் நன்றி தெரிவித்தார். உணவு வகைகள் வாங்கிக் கொண்டு சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள் லோ.விஜயகுமாருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
