சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் திருவாசகம் தேவாரம் பாடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் திருவாசகம் தேவாரம் பாடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி வழிபடுவதற்கு தீட்சிதர்கள் விதித்த தடையை அகற்றி தமிழக அரசு உத்திரவு
வெடி வெடித்து விசிக, மக்கள் அதிகாரம், உட்பட பல்வேறு அமைப்புகள் கொண்டாட்டம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் திருவாசகம் தேவாரம் பாடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைப்படி விடுதலை சிறுத்தை கட்சியினர் மக்கள் அதிகாரம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகள் பக்தர்களுடன் நேற்று சிற்றம்பல மேடையில் தமிழர் திருவாசகம் பாடினர்.
இதனை கொண்டாடும் வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமூக நலக் கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன்
தில்லை நடராசர் கோயிலில் தமிழக அரசு தமிழில் திருவாசகம், தேவாரம் பாடலாம் என்று அரசாணை வெளியிட்டது. நேற்று மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோயில் உள்ளே சென்று சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் பக்தர்களுடன் திருவாசகத்தை பாடி வந்துள்ளனர்.
அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெடி வெடித்துக் கொண்டாடி உள்ளோம். இன்னும் சிதம்பரம் கோயிலில் நிர்வாக பிரச்சினை நில முறைகேடு உள்ளன. இதனை விசாரிப்பதற்கு தமிழக அரசு குழு நியமித்துள்ளது. அப்பகுதி மக்களும் தமிழக மக்களும் உள்ள குறைபாடுகளை அந்தக் குழுவிடம் சொல்லி அந்த முறைகேடுகளை வெளியே கொண்டு வரலாம். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கீழ் சிதம்பரம் கோயிலை கொண்டு வரவேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை தீட்சிதர்கள் ஒரு தீண்டாமைச் சுவர் எழுப்பி அடைத்து வைத்துள்ளனர். அந்த சுவற்றை அகற்ற வேண்டும். அந்த சுவர் அகற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.