சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62 -வது மண்டலாபிசேக பெருவிழா.
திண்டுக்கல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி அருகே சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62-வது மண்டலாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் யாகம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மாவட்ட தலைவர் மணிவாசகம், செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஆடிட்டர் திருச்சிற்றம்பலம் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த மண்டல பூஜையை குருசாமிகளான மல்லுசாமி, குருசாமி (சர்வேயர்) சரவணன் பால்பாண்டி, காமராஜ் முன் நின்று நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். 07. 12.2022 முதல் ஜனவரி மாதம் 4 தேதி வரை தினமும் இரவு எட்டு மணிக்கு பஜனையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.