சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம்!

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் தெள்ளுர் கிராமத்தில் சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21/06/2022 அன்று வேலூர் மாவட்ட வருகையையொட்டி பொது மக்களிடமிருந்து அனைத்து துறைகள் சார்பாக கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் தொடங்கி வைத்தார் அவருடன் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் டாக்டர்கள்,செவிலியர்கள் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன் துணை சேர்மன் திருமதி.மகேஸ்வரி காசி மாவட்ட கவுன்சிலர் தா.பாபு ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் உடன் இருந்தனர்.
