சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்
தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை குட்டி இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் சாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் இருக்கும் சொர்க்கம் வனப் பகுதியில் அடிவாரத்தில் ஓ பன்னீர்செல்வம் மூத்த மகன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோப்பு ஒன்று உள்ளது.
இந்த தென்னந்தோப்பில் மழை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் விலங்குகள் விலை நிலங்களுக்குள் வராமல் தடுப்பதற்காக வேலி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வேளியில் கடந்த மாதம் 28ஆம் தேதி சிக்கி சிறுத்தை இறந்த விவகாரத்தில் தேனி வனத்துறையினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆடு கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்து வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் சரவணன் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் தலைமையில் கடந்த மூன்றாம் தேதி 500க்கு மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் உடன் இறந்த இருவரை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தின் மேலாளர் தங்கவேல் ராஜவேல் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆடு மேய்த்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும்,..
இன்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் பெரியகுளம் சாலையில் உள்ள பெத்தாச்சி விநாயகர் கோவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்தும்.
உண்மை குற்றவாளியை காப்பாற்றுவதற்காக அலெக்ஸ் பாண்டியனை சிறையில் அடைத்தது குறித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.