சிறுபாக்கம் அடுத்துள்ள வ. மேட்டூர் கிராமத்தின் உள்ளே பேருந்து வர வேண்டும் என்று அரசு பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் அடுத்துள்ள வ.மேட்டூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஊரின் உள்ளே வர வேண்டியும், திட்டக்குடி – ஆத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண்-255 வ.மேட்டூர் வழியாக செல்ல வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திட்டக்குடி – பனையாந்தூர் வரை செல்லும் தடம் எண்-6 என்ற பேருந்து வழிமறித்து வ.மேட்டூர் பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது இது தொடர்பாக அரசுக்கு நினைவூட்டும் வகையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சிறுபாக்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.