BREAKING NEWS

சிலுக்குவார்பட்டி பகுதியில் வறட்சியை போக்க மழை காலங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.

சிலுக்குவார்பட்டி பகுதியில் வறட்சியை போக்க மழை காலங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.

செய்தியாளர் ம.ராஜா.

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் சங்கால்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கீதா முன்னிலை வகித்தார்.

 

கூட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சமத்துவபுரத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுதல் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் பாண்டியராஜன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பச்சமலையான் கோட்டை ஊராட்சி , மேட்டுப்பட்டியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான புல்லு வெட்டி கண்மாய் நீரை கொண்டு கண்மாய்களை நிரப்ப வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜெய கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலுக்குவார்பட்டி ஊராட்சி, வெள்ளைதாதன்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

 

 

கூட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிலுக்குவார்பட்டி ஊராட்சி, மன்னவாரதி கண்மாய், பாப்பன்குளம், பொட்ட குளம் உள்ளிட்ட அனைத்து கண்மாய் களையும் முறையான நீர்வரத்து பாதைகளை முறைப்படுத்தி கண்மாயை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

துணைத் தலைவர் சங்கீதா, ஊராட்சி செயலர் கணேசன் உள்பட வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிள்ளையார்நத்தம் ஊராட்சி, சிறு நாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் முனிய ராஜா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு துணைத்தலைவர் அம்சவல்லி வீரகாமு முன்னிலை வகித்தார்.

 

கூட்டத்தில் சிறு நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தவும், வைகை அணையிலிருந்து வரும் பெரியார் பிரதான கால்வாயில் 11 வது மடையை தூர்வார வேண்டும் என்றும் , அந்தக் கால்வாய் சிமெண்ட் கால்வாயாக கட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி செயலர் சின்னச்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சித்தர்கள் நத்தம் ஊராட்சியில் உள்ள மல்லியம்பட்டியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முத்தையா தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு துணைத் தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் தற்போது வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால் வைகையாற்றில் புதிய கிணறு அமைத்து சித்தர்கள்நத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் விஜய கர்ணபாண்டியன், வார்டு உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள அப்பாவுபிள்ளை பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய கண்மாய் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

கூட்டத்தில் ஊராட்சி செயலர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர், விளாம்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கிழவ ராசா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது கூட்டத்தில் விளாம்பட்டி பொது மயான சாலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

 

இக்கூட்டத்தில் துணைத் தலைவர் ஷோபனா , ஊராட்சி செயலர் சின்னச்சாமி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பள்ளபட்டி ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

 

கூட்டத்தில் பள்ளபட்டி கிராமம் விவசாயிகள் பெரும்பாலும் கால்நடைகள் மாடு பசு மாடுகள் அதிகமாக வளர்ப்பதால் அரசு தரப்பில் பால் சேமிப்பு கிடங்கு தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி செயலர் பொன்னுசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )