சிவகங்கையில் பயின்று படிப்பில் சாதித்துக் காட்டிய மாற்றுத்திறனாளி மாணவன்.

சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டியில் வசிக்கும் கணேசன் முனீஸ்வரி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் நிவேதன் மாற்றுத்திறனாளியான இவர் பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்கள் இவரது பெற்றோர்கள்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியோடு தாய் இல்லத்தின் நிறுவனர் திரு புஷ்பராஜ் அவர்கள் நிவேதன் என்ற மாணவனை தாய் இல்லத்தில் தங்க வைத்து இங்கிருந்து பள்ளிக்கு சென்று படிப்புக்கு தேவையான உதவிகளை செய்யப்பட்டது
அப்போது மாணவன் நிவேதன் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் நிவேதன் 387 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்
இதன் மூலம் தாய் இல்லத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதன் நிறுவனர் திரு புஷ்பராஜ் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
