சிவகங்கையில் லயன்ஸ் கிளப் நடத்தும் இலவச மருத்துவ முகாம்.

செய்தியாளர் வி. ராஜா
சிவகங்கையில் தற்போது லயன்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் ஏ ஆர் குடியிருப்பு ரோடு 48 காலனி நகராட்சி பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் இணைந்து நடத்தும் முகாமினை சிவகங்கை நகராட்சி நகர்மன்ற தலைவர் LION.சிஎம் துரைஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சில் லயன்ஸ் கிளப் தலைவர் LN.V.ஜெயச்சந்திரன் , செயலாளர் LN.R.A.வேதராஜ், பொருளாளர் LN.MSK.முத்துப்பாண்டியன், வட்டார தலைவர் LN.முத்துக்கண்ணன் ரமனவிகாஸ் பள்ளி முதல்வர், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமதாஸ், கீதா கார்த்திகேயன், மதியழகன்,
மாவட்ட அமைச்சரவை பொருளாளர் LN.S.ரவிக்குமார், பள்ளி தலைமையாசிரியர் மரிய செல்வி,லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர்கள் அரிமா, நண்பர்கள், மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் , சமூக ஆர்வலர்கள் ரவி, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.