சிவகங்கை அருகே அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கோவானூர் கிராமத்தில் திரு. ராஜ்குமார் திரு.ரமேஷ் குமார் அவர்களின் தகப்பனார் டாக்டர் வ. ராஜேஷ்வரன் Ex MP அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் மணி மண்டப திறப்பு விழா நடைபெற்றது.
அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் டாக்டர் திவாகரன் அவர்கள் மண்டபத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார் பின்னர் டாக்டர் ராஜேஸ்வரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் அண்ணா திராவிட கழகத்தின் இளைஞரணி செயலாளர் டாக்டர் ஜெய் ஆனந்த் திவாகரன் மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
CATEGORIES சிவகங்கை
