சிவகங்கை எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

செய்தியாளர் வி. ராஜா.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன்பு பணியளார்கள் தொடர் போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக சிஎஸ்டி யை நீக்கவும், பணிக்கொடையை உயர்த்திக்கொடுக்கவும், CLIA விதிகளை மாற்றம் செய்யவும், நேரடிமுகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிடவும், ஓய்வூதியம் வேண்டும் எனவும் மற்றும் சில முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி போரட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைவர் எம்.பாஸ்கரன், செயலாளர் கே. ஜெயக்குமார்,கோட்ட இணைச்செயலாளர் எஸ்.டி.செந்தில்குமரன், தென்மண்டல செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன்,
துணை தலைவர் ஜெயச்சந்திரன், இணை செயலாளர் ஜோதி, தலைமை நிலைய செயலாளர் ரகுமதி கண்ணன், மேலும் லியாபி முகவர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
CATEGORIES சிவகங்கை