சிவகங்கை நகராட்சி உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நல்லதொரு திட்டமான சிவகங்கை நகராட்சி உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டம் (SUPPORT TO URBAN STREET VENDORS )
நகர் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான காய்கறி கடை 15 வண்டிகள், உணவுக்கடைகள் 40, பூக்கடைகள் 20, மற்றவைகள் 23, என மொத்தம் 98 இலவச தள்ளுவண்டிகள் 84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர்மன்ற தலைவர் சி.எம் துரை ஆனந்த் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைவர். நகராட்சி ஆணையாளர் வீ பாஸ்கரன் அவர்கள், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர அமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES சிவகங்கை