சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சிறுகதை எழுத்தாளர் செல்வகதிரவனின் அம்மா சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சிறுகதை எழுத்தாளர் செல்வகதிரவனின் அம்மா சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கிளைத்தலைவர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பாலமுருகன் முன்னிலை வகித்து பேசினார்.


கிளை நிர்வாகி பொன்திருவரங்கன் வரவேற்புரையாற்றினார். ஹரிநாராயணன் நூலை வெளியிட செங்கொடிவேலன் பெற்றுக்கொண்டார். சிறுகதை தொகுப்பு அம்மா நூல் குறித்து தமிழ் சங்க தலைவர் திருமாவளவன், மாநில குழு உறுப்பினர் ஜீவசிந்தன், மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி, மானம் சேவியர், சார்ஆட்சியர் மணிவேலன், கூட்டுறவு துறை ராமச்சந்திரன், நீதித்துறை ஓய்வு அமல்ராஜ், ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
கிளைச் செயலாளர் ரசீந்திரகுமார் நன்றியுறையாற்றினார். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் சந்தியா, ஓவிய ஆசிரியர் செல்வம், பொருளாளர் சபரிராஜன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். கிராமிய பாடகர் தவராஜ், அலைகள் நாராயணன், ஆறுமுகம், நாடக நடிகர் ராமசாமி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
