சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அ.விளாக்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அ.விளாக்குளம் கிராமத்தில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் விளாக்குளம் இருந்து மானாமதுரை வைகை ஆற்றில் குதிரைகள் செய்வதற்கு ஒரு மாதம் முன்பதாகவே குதிரை செய்யும் பணி தொடங்கப்பட்டு இந்த விழாவினை விவசாயம் செழிக்கவும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காகவும் மழை வேண்டி மானாமதுரையில் இருந்து விளாக்குளம் வரை நடைபயணமாக குதிரையை தோளில் தூக்கி விளாக்குளத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு எடுத்துச் சென்று அதற்கான நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

இன்று அனைத்து குதிரைகளையும் அலங்கரித்து ஊர் கிராம பொது மக்களும் இளைஞர்களும் அனைவரும் திரண்டு மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து குதிரைகளை அலங்கரித்து தூக்கி சென்றனர் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அவர்களுக்கான நேர்த்திக் கடன்களையும் செலுத்தினார்.

இரண்டாண்டு காலமாக கொரோனா காலகட்டத்தில் இருந்த நிலையில் திருவிழா கொண்டாடுவது தடைப்பட்டு நிலையில் தற்பொழுது விழாக்கள் நடத்துவதற்கு தமிழக அரசு தடையின்றி நீக்கி தந்ததால் இந்த விழா 103வது வருடம் இந்த திருவிழா 7நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறும். தற்போது இந்த ஆண்டு வெகு சிறப்பாக மேளதாளத்துடன் கேரளா மேளமும் கரகாட்டமும் இரவில் நாடகமும் வெகு நேர்த்தியாக நடைபெற்றது.
இவ்விழாவில் மானாமதுரை அரசியல் கட்சி பிரமுகர்களும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தினர் பின்பு மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மானாமதுரை நகர்மன்றத் தலைவருமான, மாரியப்பன்கென்னடி, நகர்மன்ற துணைத்தலைவர், பாலசுந்தரம் நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் நமகோடி, மற்றும் கிராம பொது மக்களும் இளைஞர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு குதிரை எடுப்பு விழாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
