BREAKING NEWS

சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர்களுக்கு நிக்கான் நிறுவனத்தினர் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி.

சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர்களுக்கு நிக்கான் நிறுவனத்தினர் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி.

சிவகங்கை காளையார்கோயில் மானாமதுரை திருப்புவனம் இளையான்குடி வட்டார புகைப்பட கலைஞர்களுக்காக நிக்கான் கேமரா நிறுவனத்தினர் நிக்கான் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்பினை சிவகங்கை முத்து மஹாலில் நடைபெற்றது. 

 

நிக்கான் மிரர்லெஸ் கேமரா பயிற்சியாளர் புலிவலம் ரவி அவர்கள் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில் நுட்பத்தை SKMTI வட்டார புகைப்பட கலைஞர்களுக்காக விளக்கிக் கூறினார்கள்.

 

 

இப்பயிற்சி வகுப்பிற்கு நிக்கான் கேமரா தமிழ்நாடு சேல்ஸ் மேனேஜர் அபிமன்யு அவர்களும் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் கார்த்திக் அவர்களும் வந்து கலந்து கொண்டு புகைப்பட கலைஞர்களுக்கு புதிய நிக்கான் மிரர் லேஸ் கேமரா வாங்குவதற்கு வசதியாக HDFC பைனான்ஸ் மூலம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். 

 

சிவகங்கை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்ட பயன் பெற்றனர்.

 

இப்பயிற்சி அளித்த நிக்கான் கேமரா நிறுவனத்தார்கள் அனைவருக்கும் சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மிக்க நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

 

செய்தியாளர் வி.ராஜா

 

 

CATEGORIES
TAGS