BREAKING NEWS

சிவகாசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தம்.

சிவகாசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தம்.

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டது.

 

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்துவந்த மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பட்டாசுகள் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பு வரை பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும்.

 

தற்போது தொடர் மழை மற்றும் வெயில் இல்லாத காரணங்களால் தொடர்ந்து பட்டாசுகளை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், இந்தப் பகுதிகளில் உள்ள 90 சதவிகித பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெளியூர்கள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுப்பும் பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

 

தொடர் மழை காரணமாக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தொடர் மழை பெய்தால் கையிருப்பில் உள்ள பட்டாசுகளை விற்பனை செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்று பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )