BREAKING NEWS

சிவகார்த்திகேயன் படத்தில் நடிகராக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் !

சிவகார்த்திகேயன் படத்தில் நடிகராக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் !

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘பிரின்ஸ்’ படத்தில் அவர் நடித்து வருகிறார். அனுதீப் டைரக்‌ஷனில் உருவாகி வரும் இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு பின் ‘மண்டேலா’ பட இயக்குனர் அஷ்வினுடன் சிவகார்த்திகேயன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )