சிவகிரியில் தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம்

சிவகிரி காந்திஜி கலைய ரங்கம் முன்பாக தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. அரசின் சாதனை களை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடை பெற்றது.
வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துரைராஜ், முனியாண்டி, முத்தையா, ராமுத்தாய், பரமசிவன், கந்தவேல், நல்லசிவன், மணி, சுந்தரவடிவேலு, மாடசாமி, ராமச்சந்திரன், அழகுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் சேது சுப்பிர மணியன் வரவேற்றார்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்
ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், முன்னாள் எம்.பி. தனுஷ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு மற்றும் மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேச்சாளர் வாடியூர் மரியராஜ் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர். கொண்டு
நிகழ்ச்சியில் ஆயில்ராஜா பாண்டியன், டாக்டர் சுமதி, டாக்டர் மணிகண்டன், கார்த்திக், வீரமணி, முத்துலட்சுமி, புல்லட் கணேசன் மற்றும் மாவட்ட அணி பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பிச்சைமணி நன்றி கூறினார்.