சிவகிரி அருகே மான் வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய இருவர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரி வன சரகத்திற்கு உட்பட்ட உள்ளாறு பகுதியில் மான் வேட்டையாடி வருவதாக திருநெல்வேலி வன பாதுகாப்பு அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரகர் மௌனிகா தலைமையில் வனவர்கள் அசோக்குமார் அஜித் குமார் மட்டும் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது கருப்பசாமி கோவில் பீட் அருகே உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு சிவகிரி தாலுகா உள்ளாறு பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை, சுப்பிரமணியபுரம் அருணாச்சலம், கனிராஜ், விக்னேஷ், அசோக்குமார் ராஜபாளையம்,
சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தொத்தியப்பன் மகன் சதீஸ்குமார், மணிவேல் மகன் பொன்ராஜ் ஆகியோர் கடமான் மற்றும் புள்ளிமானை வேட்டையாடி பங்கு வைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து மோனிகா தலைமையிலான தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
7 பேர்களைப் பிடித்து அவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைத்தனர் மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில்,..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த ராஜதுரை மகன் சதீஷ்குமார் பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
