BREAKING NEWS

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 

சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி 

தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வார்கள் இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து பூக்குழ இறங்குவது வழக்கம் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வந்த நிலையில் மக்களே நடத்தப்பட வேண்டுமென பல்வேறு சமுதாயத்தினர் பொதுநல அமைப்பினர் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

மற்றும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்று வந்த நிலைமையில் பூக்குழி நடப்பதற்கு முடிவு செய்யப்பட்டது அதன்படி பூக்குழி நடத்துவது சம்பந்தமாக கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தகவல்களில் தெரிவித்திருப்பதாவது

தமிழ்நாடு அரசுஇந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வாசுதேவநல்லூர், சிவகிரி வட்டம், தென்காசி மாவட்டம்.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவிழா தொடர்பாக தூத்துக்குடி இணை ஆணையர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு எண் OA/29/2021 தற்போது முடிவுற்று தீர்ப்பானது திருக்கோயில் நிர்வாகம் சார்பாக திருவிழா நடத்திட உத்தரவு வரப்பெற்றுள்ளது.

எனவே அதனை தொடர்ந்து உத்தரவினை நிறைவேற்றும் பொருட்டு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக திருவிழா நடைபெற ஆவண செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து எதிர்வரும்

15.04.2025 (சித்திரை 2 ) செவ்வாய்கிழமை அன்று கொட்டகைக்கால் ஊன்றுதல் 20.04.2025 (சித்திரை 7 ) ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றம் நிகழ்ச்சி 29.04.2025 ( சித்திரை 16 ) செவ்வாய்கிழமை அன்று பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது

 

இதர விபரங்கள் திருக்கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். மேலும் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் திருவருள் பெற்று செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

திருக்கோயில் நிர்வாகம் என்று அந்த தகவல் அறிவிப்பு போர்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது குமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூக்குழி நடைபெற இருப்பதே ஒட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைத்து சமுதாயத்தினர் பொதுநல அமைப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் படம் வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பூக்குழி நடத்துவது சம்பந்தமாக கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

CATEGORIES
TAGS