சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு,
தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை 1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதன், செங்கல்பட்டு நகர் மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மினி மாரத்தானை மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் கொடி அசைத்து துவங்கி வைத்தார். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மாரத்தான் புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மீண்டும் சுகாதாரத்துறை அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றது.